உலகம் பிரதான செய்திகள்

சி.ஐ.ஏ.வின் இயக்குனராக ஜினா ஹெஸ்பெல் நியமிக்கப்பட்டமைக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ.வின் இயக்குனராக ஜினா ஹெஸ்பெல் (Gina Haspel) நியமிக்கப்பட்டமைக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.  33 ஆண்டுகளாக சீ.ஐ.ஏவில் கடமையாற்றி வரும் ஜினா ஹெஸ்பெல் என்பவரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிந்துரை செய்திருந்தார்.

ஜினா ஹெஸ்பெல்லின் முறைமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருந்தது. குறிப்பாக ஜினா ஹெஸ்பெல் சித்திரவதை அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது நியமனத்துக்கு சில செனட் சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், அவரது நியமனத்துக்கு நாடாளுமன்ற செனட் சபை நேற்று ஒப்புதல் கொடுத்துள்ளது. அதற்கான தீர்மானம் அமெரிக்க செனட் சபையில் நிறைவேறியது. 54 செனட் உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாகவும், 45 உறுப்பினர்கள் அவருக்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

முன்னாள் இயக்குனரான மைக் போம்பேயோ அமெரிக்க வெளியுறவுச் செயலராக பதிவியேற்றதால் ஜினா ஹஸ்பெல் இந்த பொறுப்பை ஏற்றுள்ளார். ஜினா ஹேஸ்பெல் சி.ஐ.ஏ. இயக்குனராக பதவியேற்கும் முதல் பெண் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது

சீ.ஐ.ஏ தலைமைப் பொறுப்பிற்கு ட்ரம்ப் பெண் ஒருவரை பரிந்துரை செய்துள்ளார்

May 8, 2018 @ 03:23


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அமெரிக்க உளவுத்துறையான சீ.ஐ.ஏ வின் தலைமைப் பொறுப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பெண் ஒருவரை பரிந்துரை செய்துள்ளார். 33 ஆண்டுகளாக சீ.ஐ.ஏவில் கடமையாற்றி வரும் ஜினா ஹெஸ்பெல் ( Gina Haspel)  என்பவரையே ட்ரம்ப் பரிந்துரை செய்துள்ளார். ஜினா ஹெஸ்பெல்லின் முறைமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஜினா ஹெஸ்பெல் சித்திரவதை அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பயங்கரவாதிகளுக்கு கடுமையானவர் என்ற காரணத்தினால் அவர் தொடர்பில் விமர்சனங்கள் எழுவதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஜினா ஹெஸ்பெல் முன்னதாக தாம் இந்தப் பதவியை வகிக்கப் போவதில்லை என கூறியிருந்தார் பின்னர் தாம் இந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளத் தயார் என குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் புதன்கிழமை செனட்சபையின் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்தப் பதவி வெற்றிடத்திற்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஜினா ஹெஸ்பெல்லின் தலைவிதி நிர்ணயிக்கப்பட உள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.