உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

மட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜாகோவிச் தோல்வி


ஸ்பெயினில் நடைபெற்று வரும் மட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று போட்டியில் ஜோகோவிச் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சுக்கும் இங்கிலாந்து வீரர் கைல் எட்முன்ட்டுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் ஜோகோவிச் 3-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

மற்றொரு போட்டியில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் 7-5, 6-3 என்ற நேர்செட்டில் நெதர்லாந்து வீரர் ராபின் ஹாஸ்சை தோற்கடித்துள்ளார்

அதேவேளை பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 6-1, 6-4 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் கிறிஸ்டினா பிளிஸ்கோவாவை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறியுள்ளார்

மற்றொரு போட்டியில் செக் குடியரசுயின் கரோலினா பிளிஸ்கோவா 6-2, 6-3 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஸ்டீபென்ஸ்சை வீழ்த்தியுள்ளார். மேலுமொரு போட்டியில் டென்மார்க்கின்   கரோலின் வோஸ்னியாக்கி 2-6, 2-6 என்ற நேர்செட்டில் நெதர்லாந்து வீராங்கனை பெர்டென்ஸ்சிடம் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.