உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

மட்ரிட் ஓபன் டென்னிஸில் கரோலினா – கிகி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

ஸ்பெயினில் நடைபெற்று வரும் மட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் கால்இறுதி போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் முதல்தர வீராங்கனை சிமோனா ஹாலெப் போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி போட்டியில் ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப் செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா(Karolina Pliskova) வுடன் போட்டியிட்டார். இதில் கரோலினா 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளார்.

மற்றொரு கால்இறுதிப் போட்டியில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸ்(Kiki Bertens  )  4-6, 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில்  ரஸ்ய   வீராங்கனை மரிய ஷரபோவாவை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 7 other subscribers