பிரான்ஸின் மத்திய பாரிஸ் நகரில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். பாரிஸின் ஒபெரா மாவட்டத்தில் இடம்பெற்ற இந்த வாள் வீச்சுத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதலை ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்டதாக உரிமை கோரப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் சனநெரிசல் மிக்க ஓர் பகுதியில் இந்த தாக்குதல் சம்வம் இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸ் நாட்டு மக்கள் மீளவும் இரத்தத்தினால் இழப்பினை வழங்க நேரிட்டுள்ளதாகவும் இந்த மாதிரியான தாக்குதல்களினால் எதிரிகளுக்கு ஒரு அங்குலமேனும் சுதந்திரம் வழங்கப்படாது எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment