இலங்கை பிரதான செய்திகள்

அமைச்சரவையில் மீளவும் மாற்றம் வெருமா?

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

அமைச்சரவையில் மீளவும் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிக் கொண்டால் மீளவும் ஜனாதிபதி அமைச்சரவையில் திருத்தங்கள் செய்ய நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அரசாங்கத்தின் சில முக்கிய பதவிகளை சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வகித்து வருகின்றனர்.

எனினும் அக்கட்சி அரசாங்கத்தை விட்டு விலகினால் , அமைச்சுப் பதவிகளில் தொடர்ந்தும் நீடிக்கக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என தெரிவிக்க்பபடுகிறது. அரசாங்கத்தில் தொடர்ந்தும் நீடிப்பதா இல்லையா என்பது குறித்து சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு வாக்கெடுப்பு ஒன்றை நடத்த உள்ளது. அரசாங்கத்தை விட்டு விலகுவது குறித்த யோசனையை கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் ஜோன் செனவிரட்ன மத்திய செயற்குழுவிடம் முன்வைக்க உள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.