குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கூட்டு எதிர்க்கட்சி 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த போகும் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் நாட்டுக்கு அறிவிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அரசியல் ரீதியான தற்போது கடுமையாக வங்குரோத்து அடைந்து்ளளவர்கள் ராஜபக்ச குடும்பத்தில் பிளவை ஏற்படுத்த குழந்தைத்தனமான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். ராஜபக்சவினர் மத்தியில் சிறு வயதில் கூட சண்டைகள் வந்ததில்லை.
வரலாறு முழுவதும் ராஜபக்சவினர் நாட்டுக்காக ஒற்றுமையுடன் செயற்பட்டுள்ளனர். இதனை ராஜபக்சவினர் செயலில் காட்டியுள்ளனர்.2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அறிவிக்கப்பட்டதும் தகுதியான வேட்பாளர் யார் என்பதை நாட்டுக்கு அறிவிக்கப்படும் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment