இலங்கை பிரதான செய்திகள்

வேலியே பயிரை மேய்ந்த கதை – பாலியல் தொந்தரவுக்கு உடந்தையாக இருந்த தாய்?

கிளிநொச்சியில் பாலியல் தொந்தரவுக்கு உடந்தையாக இருந்தார் என பெற்ற மகளினால் சுமத்தப்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பதில்நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது, அவரை எதிர்வரும் 17ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் சிறுமி ஒருவரை கிளிநொச்சியை சேர்ந்த காவல்துறை அதிகாரியெருவர் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்த உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்திலேயே குறித்த பெண் இன்று கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி, சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் செய்த முறைப்பாட்டு வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.