பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு அரைவாசி நிறைவடைந்த நிலையில் பின் தயாரிப்புப் பணிகள் நாளை 15ஆம் திகதி ஆரம்பிக்கப்படுகின்றது.
சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடிப்பில் திரைப்படம் ‘சீமராஜா’. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் ந டைபெற்ற ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அத்துடன் எதிர்வரும் மே 24ஆம் தேதி தலக்கோணத்தில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பை தொடங்கவும் அதனை ஜூன் மாதத்துக்குள் முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில் பின் தயாரிப்புப் பணிகளும் நாளை ஆரம்பிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் நடிகை சிம்ரன் வில்லியாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரத்தில் சூரியும் நடிக்கின்றனர். 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தை வரும் செம்பட்மபர் மாதம் வெளியிட தீர்மானித்துள்ளதாக இயக்குனர் பொன் ராம் கூறியுள்ளார்.
Add Comment