உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் ரோஜர் பெடரர் – சிமோனா முதலிடம்


உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மீண்டும் முதலிடத்தினை பிடித்துள்ளார். உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது.  இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 8,670 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருந்து மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 7,950 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார். ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 3-வது இடத்தில் தொடர்கின்றார்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் 7,270 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 2-வது இடத்திலும், ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜ 3-வது இடத்திலும், உள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.