பிரதான செய்திகள் விளையாட்டு

மேற்கிந்தியதீவுகள் அணிக்கும் பங்களாதேஸ் அணிக்குமிடையேயான இருபதுக்கு இருபது போட்டிகள் புளோரிடாவில் நடைபெறவுள்ளது


புளோரிடாவில் மேற்கிந்தியதீவுகள் அணிக்கும் பங்களாதேஸ் அணிக்குமிடையில் இருபதுக்கு இருபது போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியதீவுகளுக்கு ஜீன் முதல் ஓகஸ்ட் வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பங்களாதேஸ் அணி மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது

முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும், அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரும், அதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில் இருபதுக்கு இருபது போட்டிகளில் இரண்டை அமெரிக்காவின் புளோரிடாவில் நடத்தவுள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது ஓகஸ்ட் 4ம் 5ம் திகதிகளில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.