இலங்கை பிரதான செய்திகள்

2009ன் பின் புலித் தீவிரவாதத்தின் பெயரில் வெடிப்புகளோ, சூடுகளோ இல்லை….

 

இலங்­கை­யின் நீதித்­ துறைக் கட்­ட­மைப்­புக்­குட்­பட்ட எந்த விசா­ர­ணை­க­ளுக்­கும் இலங்கை இரா­ணு­வம் தயார் –

இலங்­கை­யின் நீதித்­ துறைக் கட்­ட­மைப்­புக்­குட்­பட்ட எந்த விசா­ர­ணை­க­ளுக்­கும் இலங்கை இரா­ணு­வம் தயா­ரா­கவே உள்­ளது. பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தால்  இலங்கை மட்­டு­மல்ல, எந்­த­வொரு நாடும் ஆக்­க­பூர்­வ­ம­டை­யாது. போரில் கூட நாம் வெற்­றி­ய­டைந்­தி­ருக்­க­மாட்­டோம். என  இரா­ணு­வத் தள­பதி லெப்­டி­னன்ட் ஜென­ரல் மகேஸ் சேனநா­யக்க தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யா­வி­லி­ருந்து வெளி­வ­ரும் ‘த இந்து’ நாளி­த­ழுக்கு அளித்த செவ்வியில்,

இலங்கை இப்­போது அமை­தி­யான நாடாக இருக்­கின்­றது. வெளி­யி­லி­ருந்து ஆக்­கி­ர­மிப்பு போன்­றவை இல்­லா­விட்­டா­லும் அமை­தியை விரும்­பாத சில தீய­சக்­தி­கள் ஆங்­காங்கே குழப்­பங்­களை அவ்­வப்­போது ஏற்­ப­டுத்­து­கின்­றன.

புலித் தீவி­ர­வா­தத்­தின் பெய­ரில் எந்­த­வொரு வெடிப்­புச் சம்­ப­வமோ அல்­லது துப்­பாக்­கிச்­சூட்­டுச் சம்­ப­வமோ 2009 மே 19ஆம் திக­திக்­குப் பின்­னர் இது­வரை  ஏற்பட்டது இல்லை. போருக்­குப் பின்­ன­ரான முன்­னேற்ற விட­யத்­தில் உலக நாடு­க­ளுக்கு நாம் முன்­மா­தி­ரி­யாக இருக்­கின்­றோம்.

வடக்­கில் இரா­ணு­வத்­தி­னர் கணி­ச­மான அள­வில் குறைக்­கப்­பட்­டுள்­ள­னர். பெரு­ம­ளவு காணி­கள் மீள­வும் மக்­க­ளி­டம் திருப்பி வழங்­கப்­பட்­டுள்­ளன. போதைப்­பொ­ருள் கடத்­தல், ஆள்­க­டத்­தல் உட்­பட்ட விட­யங்­க­ளைத் தடுக்­க­வும், சட்­டம், ஒழுங்கை நிலை­நாட்­ட­வும் படை­யி­னரை நிலை­நி­றுத்­தல் அவ­சி­ய­மா­கின்­றது.

சிவில் நட­வ­டிக்­கை­க­ளில் இரா­ணு­வம் தலை­யீ­டு­க­ளைச் செய்­வ­தில்லை. போர் நீண்­ட­கா­லம் நடை­பெற்ற ஒரு பகு­திக்கு அமை­திக் காலத்­தில் சிவில் செயற்பாடுகளுக்கு  படை­யி­ன­ரின் ஒத்­து­ழைப்பு தேவை.

இது தொடர்­பில் நான் வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரு­டன் பேச்சு நடத்­தி­யுள்­ளேன். சிலர் எமது பிர­சன்­னத்தை எதிர்த்­தா­லும் பலர் ஆத­ரிக்­கின்­ற­னர். இரா­ணு­வம் நிலை­கொண்­டி­ருக்­கும் மக்­க­ளின் மேலும பல காணி­கள் விரை­வில் விடு­விக்­கப்­ப­டும். காணி­கள் விடு­விப்­பின்­போது பல விமர்­ச­னங்­கள் வந்­தா­லும் எந்த அர­சி­யல் அழுத்­தங்­க­ளு­மின்றி இரா­ணு­வம் இது விட­யத்­தில் சுயா­தீ­ன­மாக முடி­வு­களை எடுக்­கின்­றது. தேசிய பாது­காப்பு விட­யத்­தில் நாங்­கள் சம­ர­சம் செய்­து­கொள்­ள­வும் முடியாது என இரா­ணு­வத் தள­பதி லெப்­டி­னன்ட் ஜென­ரல் மகேஸ் சேனநா­யக்க தெரி­வித்­துள்­ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers