இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: மனக்காயங்களை ஆற்றத்தக்க பரவலான செயற்பாடுகள் அவசியம் –

உளவள வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சிவதாஸ்…


முள்ளிவாய்க்கால் துயரம் என்பது ஒட்டு மொத்த தமிழ் இனத்தின் துயர முகத்தைக் காட்டுவதாகும். அதனை வருந்தோறும் நினைகூர்வதன் மூலம் அந்த மோசமான துயரத்துக்கு ஆளாகியவர்களைத் அந்தத் துயரத்தில் இருந்து தேற்றிக் கொள்வதற்கு வழி வகுக்கின்றது என உளநல மருத்துவ நிபுணர் டாக்டர் சிவதாஸ் கூறினார்.

முள்ளிவாய்க்கால் துயத்தின் தன்மை உளவியல் ரீதியான கருத்து என்ன என கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஒருவர் துயரமடைவது இயல்பு. அந்தத் துயரத்தைத் தேற்றிக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டியது அவசியம். அந்த வகையில் முள்ளிவாய்க்கால் துயரத்தை நினைவுகூர்வதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்களைத் தேற்றிக்கொண்டு, வாழ்க்கையில் முன்நோக்கிச் செல்வதற்கான உனந்துதலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

முள்ளிவாய்க்கால் அளவற்ற துயரத்தைத் தந்துள்ளது. அந்தத் துயரத்தில் வெந்துவிடாமல், மீண்டு எழுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் அமைகின்றது. யுத்த மோதல்களும் பேரழிவுகளும் இடம்பெற்ற உலக நாடுகள் பலவற்றில் இது மாதிரி நடைபெறுகின்றது. ஜப்பான் ஹிரோஷிமா குண்டுத் தாக்குதல் என்பது மிகமோசமான ஒரு சம்பவம். அந்த துயர சம்பவத்தில் இருந்து மீள்வதற்காகவே ஹிரோஷிமா நிகழ்வு நினைவுகூரப்படுகின்றது. அந்த வகையில் முள்ளிவாய்க்காலும் நினைவுகூரப்படுவது அவசியம்.

முள்ளிவாய்க்கால் நினைவு கூர்வது என்பது விசேடமாக தமிழ் இனத்தின் ஒன்றிணைப்பை வலியுறுத்துகின்றது. இது ஒரு முக்கிய விடயம். அளவற்ற அந்;தத் துயரத்தின் மனக்காயங்களில் இருந்து பலர் இன்னும் மீளவில்லை. முள்ளிவாய்க்கால் நினைவுதினம் நெருங்குகையில் உள மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு வருகின்றவர்களில், முள்ளிவாய்க்கால் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்திருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது அந்தத் துயரம் மீளெழுந்து பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிப்படையச செய்வதையே காட்டுகின்றது.

முள்ளிவாய்க்கால் துயரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உளநல வகுப்புகளுக்கு வரும்போது முன்னர் நடந்தவற்றை எண்ணி கண்ணீர் சிந்துகின்றார்கள். வெளியில் ஆட்களுக்கு முன்னால் அவர்கள் அமைதியானவர்களாக புன்முறுவலுடன் காணப்படுவார்கள். ஆனால் மனதுக்குள்ளே அந்தத் துயரம் தருகின்ற துன்பத்தில் அவர்கள் ஆழ்ந்திருப்பார்கள். தொடர்ச்சியான இந்தத் துன்பமே சிலருக்கு உளNநூயாக வெளிப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு வருகின்றார்கள். சிலருக்கு இந்தத் துன்பம் மனச்சோர்வை ஏற்படுத்தி, அவர்களை இயல்பான வாழ்க்கைச் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கியிருக்கச் செய்துவிடுகின்றது.

இத்தகைய உளவியல் பாதிப்பானது, அவர்களது தொழிற்திறனை இழக்கச் செய்து வாழ்க்கையில் அவர்களை முடங்கச் செய்கின்றது. சிலர் உணர்சசிக் கொந்தளிப்பினால் உறவுச் சிக்கல்களுக்கு ஆளாகின்றார்கள். அதனால் அவர்களுக்கு மற்றவர்களுடன் முரண்பாடுகள் அதிகரித்து அவர்கள் அல்லல்படுகின்றனர்.

இன்னும் சிலர் மனக்காயங்களை ஆற்றுவதற்கு மதுவருந்தி, அதற்கு அடிமையாகின்றனர். வேறு சிலர் உடல் உபாதைகளுடன் வைத்திய சாலைகளை நோக்கி நித்தமும் செல்கின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மூலமகாரணமாக ஆற்றுப்படுத்தப்படாத மனக்காயமே பின்னணியில் உள்ளது. மனக்காயங்களை நாம் குணமாக்காது விட்டால், இந்த யுத்தத்தினல் ஏற்பட்ட பாதிப்பைவிட அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி மெல்ல மெல்ல சமூகத்தை அழித்துவிடுகின்ற ஆபத்து உள்ளது. இந்த குணமாக்குதலை அவசிய தேவை கருதி முன்பே செய்யப்படவில்லை என்பதே எனக்குள்ள மனக்குறை.

எனவே, அடுத்த வருடம் பத்தாவது முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தையாவது, மதத்தலைவர்கள் உளநல சிசிக்கையாளர்கள் உள்ளிட்ட சகலருடைய பங்களிப்பில் உளவியல் ரீதியான குணமாக்கல்; செயற்பாட்டுடன் நினைவுகூரல் நிகழ்வைச் செய்ய வேண்டும்.
முள்ளிவாய்க்கால் என்ற பொது இடத்தில் மட்டுமல்லாமல், ஒவ்வொரு பிரதேசத்திலும், பாதிப்புக்குள்ளானவர்களின் மனக்காயங்களைக் குணமாக்கும் ஒரு நிகழ்வாக, பரந்த அளவில் இது நடைபெற வேண்டும். அதுவே எமது சமூகத்திற்கு சாலப் பொருத்தமாகும். இவ்வாறு பெரிய அளவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைச் செய்யும்போது, பாதிக்கப்பட்டவர்களின் மனக்காயங்கள் ஆறவும், அதன் ஊடாக, தொழிற்திறன் மிகுந்த மனமகிழ்ச்சியுடன் கூடிய, வாழ்க்கை முறையைக் கொண்டதாக எதிர்கால சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். எனவே, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது இந்த குணமாக்கல் செயற்பாட்டின் ஒரு கூட்டு நிகழ்வாகவும் பல்வேறு தரப்பினரும் பங்குற்றும் நிகழ்வாகவும் செய்யும் மாத்திரத்தில் மட்டுமே இது வெற்றியளிக்கக்கூடியதாக இருக்கும்.

எவ்வாறு ஆழமாக வேரூன்றியிருக்கின்றது?

பெண் ஒருவர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி தனது சகோதரனை இழந்துள்ளார் அந்த இழப்பின் பின் தனது சகோதரனைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற துயரத்தினால் அவருக்கு ஏற்பட்ட மனக்காயம் ஆற்றப்படவில்லை. போருக்குப் பின்னரான வாழ்க்கையில் பொருhளாதார ரீதியிலும், உளவியல் ரீதியான ஆதரவு தளத்திலும் அல்லல்பட்டு, இப்போது அந்தப் பெண்ணிடம் மனக்காயங்களுக்கான குணங்குறிகள் மிகையாகக் காணப்படுகின்றன. எந்தவிதமான அன்றாடச் செயற்பாடுகளுக்கும் முகம் கொடுக்கமாமல மனச்சோர்வுக்கு ஆளாகிய நிலையில்; அடிக்கடி கோபமடைந்து உறவுகளுடன் முரண்பட்டுக்கொண்டிருக்கின்றார்.

தான் மட்டும் உயிர் தப்பிக் கொண்டு தனது சகோதரனைக் காப்பாற்ற முடியாத குற்ற உணர்வுடன் வேதனைப்பட்டு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை இழந்து வெறும் நடைப்பிணமாகவே அவர் திரிகின்றார். இவருடைய நிலைமை சந்திப்பு ஒன்றிலேயே தெரியவந்தது. இவரது மனக்காயங்களை ஆற்றுவதற்குரிய சிகிக்சை இவருக்குக் கிடைக்கவில்லை.

அந்தப் பெண், தான் சமூகத்திற்குப் பயனுள்ளவர் என்பதை உணராமல் தனது சுயகணிப்பினை இழந்து தான் மற்றவர்களுக்க உபயோகமில்லாதவர் என்ற உணர்வுடன், செயற்பாட்டுத்திறன் குன்றிய நிலையில் காணப்படுகின்றார். இவ்வாறு அவர் வாழ்வது சமூகத்திற்குப் பாதகமானது.

அபிவிருத்தி என்ற போர்வையில், வீதகளும் கட்டிடங்களும் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வகையில் பௌதிக அபிவிருத்தி நடைபெற்றுள்ளது. ஆனால் உளவியல் அபிவிருத்தி நடைபெறவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் மனக்காயங்களை ஆற்றுவதற்கு உரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. உலகத்தில் வாழ்வதற்கு ஒரு பிரயோசனம் இருக்கின்றது என்பதை உணராமல் வாழ்வது என்பது ஒரு துயரம். அந்தத் துயரத்தைக் களைந்து, இணைக்கப்பட்ட சமூகமாக வாழ்வதற்கு உளவியல் ரீதியான மனக்காயங்களைக் குணமாக்கல் மிகவும் அவசியம்

யுத்தப் பாதிப்புக்கு நேரடியாக முகம் கொடுத்த மக்களில் மூன்றில் ஒரு பங்கிளரிடம் மனக்காயங்கள் ஆற்றப்படாத நிலைமை காணப்படுகின்றது. இத்தகைய மனக்காயங்களை உடைய மக்களை இனங்கண்டு அவர்களுக்கு உரிய குணமாக்கல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியது சமூக முன்னேற்றத்திற்கு அவசியம் என்று பல நாடுகளில் செய்யப்பட்ட போருக்குப் பிந்திய ஆய்வுகள் கூறுகின்றன. முப்பது வருடகால யுத்தத்திற்கு முகம் கொடுத்த மக்கள் வாழ்கின்ற எமது நாட்டிலும் அது அவசியம் செய்யப்பட வேண்டும்.

பெரிய வைத்தியசாலைகளில் செயற்படுகின்ற உளவள சிகிச்சை நிலையங்களில் இந்த மனக்காய குணமாக்கல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அது சமூகத்தில் நிலவுகின்ற உளவள தேவையைப் பூர்த்தி செய்வதற்குப் போதாது. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அடிமட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம்.

கிராம மட்டத்தில் காணப்படுகின்ற ஆரம்ப சுகதார நிலையங்களில் இத்தகைய சிகிச்சை முறை அறிமுகப்படுத்தல் வேண்டும். இதன் ஊடாக மனக்காயங்களுக்கான சிகிச்சையளிக்கும் செயற்பாட்டை சமூகத்தின் அடித்தளத்திற்குக் கொண்டு செல்ல முடியும்.
எனவே, மத்திய மாகாண அரசுகள் இதற்கு முன்னுரிமை வழங்கி பேரிடர் கால அணுகுமுறையில் இவற்றைச் செயற்படுத்த முன்வர வேண்டும். போர்க்கால நடவடிக்கையாக இது நாடுகளில் நடைபெற்றது. ஆனால் இங்கு நடைபெறவில்லை. பேரிடர் கால நடைமுறைப் போக்கில் கிராமம் கிராமமாக ஆட்களை அணுகி உளவியல் இடர்களுக்கு உள்ளானவர்களை அடையாம் கண்டு அதற்குரிய சிகிச்சை அளிக்க வேண்டும். சீனாவில் நடைமுறையில் உள்ள வெறுங்கால் வைத்தியர்கள் (டீயசந குழழவ னுழஉவழசள) என்ற செயற்பாட்ற்கு ஒத்ததாக இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும்.

உளவள வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சிவதாஸ்…

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap