குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நாஜீப் ரசாக்கின் இல்லமொன்றிலிருந்து பெருந்தொகை இலங்கைப் பணம் மீட்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரின் இல்லங்கள் அனைத்தும் அண்மைiயில் மலேசிய காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கைகளின் போது 2.87 மில்லியன் ரூபா இலங்கை நாணயத் தாள்கள் மீட்கப்பட்டுள்ளன. அதி சொகுசு கைக்கடிகாரங்கள், தங்க ஆபரணங்கள், ஆடம்பர கைப்பைகள், பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை காவல்துறையினர் மீட்டிருந்தனர். நிதிச் சலவை சட்டத்தின் கீழ் இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
Add Comment