பிரதான செய்திகள் விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் – ஷரபோவா – ரபெல் நடால் – மரின் சிலிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்


ரோம் நகரில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஷரபோவா ரபெல் நடால், மரின் சிலிச் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.  நேற்றையதினம் நடைபெற்ற ; பெண்கள் ஒற்றையர் கால்இறுதி போட்டி ஒன்றில் நடப்பு சம்பியனான உக்ரைன் எலினா ஸ்விடோலினாவினை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜேர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை வென்றுள்ளார்.

அதேவேளை ரஸ்யாவின் மரிய ஷரபோவா, பிரெஞ்ச் ஓபன் சம்பியனான லாத்வியாவின் அஸ்டாபென்கோவை எதிர்கொண்டு 6-7 (6-8), 6-4, 7-5 என்ற செட் கணக்கில் ஆ வென்று அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளார்.

அதேவேளை ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ரபெல் நடால் மற்றும் மரின் சிலிச் ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்கள். முதல் நிலை வீரரான ரபெல் நடால் இத்தாலியின் பபியோ போக்னினியை எதிர்கொண்டு 6-1, 6-2 என்ற அடிப்படைமயில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு பொட்டியில் குரோஷியாவின் மரின் சிலிச் ஸ்பெயினின் பப்லோ கர்ரெனோ எதிர்கொண்ட ;6-3, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.