உலகம் பிரதான செய்திகள்

ஆப்கானிஸ்தானில் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 8 பேர் பலி


ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் உள்ள விளையாட்டு  மைதானம் ஒன்றில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு குறித்த கால்பந்தாட்ட மைதானத்தில் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்று வந்தபோது, தீவிரவாதிகள் ரொக்கட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 8 பேர் கொல்லப்பட்டதுடன் , 43-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அடுத்தடுத்து தொடர்ந்து 3 முறை தாக்குதல் நடைபெற்றதாகவும், இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.