இலங்கை பிரதான செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – முதல்வரின் நன்றியும் – முதல்வருக்கு நன்றியும்…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


கட்சி பேதமின்றி, பிரதேச பேதமின்றி எங்கள் மக்கள் சகலரையும் உள்ளணைத்து மிகக் குறுகிய காலத்தினுள் இவ் வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒழுங்கு செய்து நடத்தியமை எல்லோரதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.

சில சில குறைபாடுகள் எமக்குத் தெரியப்படுத்தப்பட்டன. எனினும் நிகழ்வின் தாற்பர்யம் உணர்ந்தும் எமது மக்கள் பிரதிநிதிகளினதும் மற்றோரினதும் பொறுமை முதிர்ச்சி ஆகியன நிமித்தமும் அவற்றைப் பொருட்படுத்தாமை எமக்கு மகிழ்வைத் தருகின்றது.  குறுகிய கால ஒழுங்கமைப்பில் இந்த நிகழ்வைச் சிறப்புறச் செய்ய உதவிய சகலருக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக!

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

நினைவேந்தலில் ஒன்றுபட்டதற்கு நன்றி.

மே 18. தமிழினப் படுகொலை நாள் குறித்த விடயங்களில் பொறுமை, சகிப்புத்தன்மை போன்ற பல்வேறு அம்சங்களூடாக இனங்காட்டிய அனைவருக்கும் எமது நன்றிகள். குறிப்பாக உலக அரங்கில் இறுதிப் போரில் நிகழ்ந்தவை இனப்படு கொலையே என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து தாம் வகித்த பதவிக்குப் பெருமை சேர்த்த வடக்கு முதல்வருக்கு எமது மனமார்ந்த நன்றியை மீண்டும் வெளிப்படுத்துகிறோம்.

யுத்தம் முடிவுற்ற வேளை முன்னாள் போராளியொருவரே கிழக்கின் முதல்வராகப் பதவி வகித்தார். 2009 மே 18 வரை உயிர் பறிக்கப்பட்ட தம்மை இழந்த பலரை அவருக்கு நேரடியாகத் தெரியும். அதற்கு அடுத்ததாக அமைந்த மாகாண சபை யின் ஆயுட்காலத்தின் பிற்பகுதியில் தமிழரின் பிரதான கட்சியே தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது. எனினும் இனப்படு கொலை என்ற விடயத்தை இந்த இரு தரப்பும் துணிச்சலாக வெளிப்படுத்தத் தயாராக இருந்திருக்கவில்லை. இந்த வகையில் தான் நாம் வடமாகாணசபை நிறைவேற்றிய தீர்மானத்தின் கனதியை அறிந்து கொள்ளமுடியும்.

மேலும் இவ்வருட நினைவு நிகழ்வு தொடர்பாக நாம் மூவரும் விடுத்த வேண்டுகோளை மதித்து தமது உச்சக் கட்ட பொறுமையையும் விட்டுக்கொடுப்பையும் வெளிப்படுத்தியதோடு தமது சக்திக்கு அப்பாலும் சென்று நிகழ்வுக்கான பங்காளராகப் பல தரப்பினரையும் ஈடுபடுத்திய வடக்கு முதல்வருக்கு பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பில் நன்றிகள். அவரது உரையினை ஆழமாக நோக்குபவர்கள் தமிழ் மக்களின் உணர்வையும் அவர் எழுப்பும் கேள்வியையும் எதிர்பார்ப்பையும் உணர்ந்து கொள்வர்.

எது எவ்வாறாயிருந்தாலும் இன்றைய ளுஅயசவிhழநெ யுகத்தில் இளைய தலைமுறையினரை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்ல ஆயிரம் வழிகள் உள்ளன. ஆயினும் சாத்தியமான அளவில் எமது வேண்டுகோளை ஏற்றதுடன் தமது இனப்பற்றையும் வெளிப்படுத்திய யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருக்கும் எமது நன்றிகள். இன்றைய உலக ஒழுங்கு நடைமுறைபோன்ற விடயங்களூடாக அதனை வெளிப்படுத்தினர் மாணவர்கள். ‘போராட்ட வடிவம் மாறலாம் போராட்ட இலட்சியம் மாறாது’ என சுதுமலையில் தலைவர் தெரிவித்த கருத்தினை வலியுறுத்துவதாக இளைஞர் எழுச்சியை நாம் காண்கிறோம்.

இளைஞர் சக்தி என்பது தீக்குச்சி போன்றது. அதனைக் கொண்டு சுடரேற்றவும் முடியும், வீட்டைக் கொழுத்தவும் முடியும். நாம் சுடரேற்றுவதையே விரும்பினோம். இரண்டாவது அம்சத்தை செயல்படுத்த தலைகீழாக நின்ற சக்திகளை எமது மக்கள் மிக நன்றாகவே அறிவர். எனவே அந்த விடயத்தை மக்களிடமே விட்டுவிடுவோம்.
எதிர்காலத்தில் மதகுருமார் தலைமையிலான நினைவேந்தல் குழுக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற எமது எதிர் பார்ப்பை மீண்டும் வலியுறுத்துகிறோம். இது தொடர்பாக வட கிழக்கிலுள்ள சகல பொது அமைப்புக்களுடனும் தொடர்பினை ஏற்படுத்த முனைந்து வருகின்றோம். குறிப்பாக கிழக்கு மற்றும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். மாணவர் ஒன்றியத்தின் அதிகூடிய பங்களிப்பு இதில் இருப்பது விரும்பத்தக்கது. இதேவேளை ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகள் தொடர்பாக கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்று முகமாக கல்விச் செயற்பாடு பாதிக்கக்கூடாது என தந்தையர்கள் என்ற நிலையில் இருக்கும் நாம் விரும்புகிறோம்.

எமது எதிர்பார்ப்புகளிற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.

பா. சின்னத்துரை

மு.மனோகர்

ஆ.ரவீந்திரா

19.05.2018
யாழ்ப்பாணம்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers