சினிமா பிரதான செய்திகள்

பிக்பொஸ் 2 டீசரை நடிகர் கமல் ஹாசன் வெளியிட்டார்! 

நடிகர் கமல்ஹாசன் பிக்பொஸ் 2 ஆம் பாகத்திற்கான டீசரை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.  `பிக்பொஸ்’. கடந்தாண்டு தமிழ்த் தொலைக்காட்சி உலகில் அதிகம் வரவேற்பைப் பெற்ற ஓர்  நிகழ்ச்சி. இதன் முதல் பாகத்திற்கான நிகழ்ச்சி தொடங்குவதற்க்கு முன்பாகவே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார், பங்கேற்பவர்கள் யார் என கடுமையாக எதிர்பாரப்பை தோற்றுவித்திருந்தது.

இந்த நிலையில் எவரும் எதிர்பாராத நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க களம் இறங்கினார். தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. பிக்பொஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தி நிகழ்ச்சியான பிக்பொஸ்சை அடிப்படையாகக் கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ இது ஜான் டி மோல் என்பவரால் உருவாக்கப்பட்டது.

இது டச்சு பிக் பிரதர் வடிவத்தை முலமாகக் கொண்டது. இதில் போட்டியாளர்கள் (“ஹவுஸ்மேட்ஸ்” என்று அறியப்படுபவர்கள்) இந்த நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட வீட்டில் வாழ்கின்றனர், மேலும் இவர்கள் உலகின் பிற தொடர்பிலிருந்து இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
ஒவ்வொரு வாரமும், வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு, ஒவ்வொருவரும் அவர்களுடன் குடியிருக்கும் சகப் போட்டியாளர்கள் இருவரைத் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு வெளியேற்றுவதற்கு அவர்களுக்குள் ஒரு பொது வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிவரும்.இதில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் வெளியேறும் ஒருவரை மக்கள் ஓட்டு தீர்மானிக்கும். இறுதி வாரத்தில், வீட்டில் மீதமிருக்கும் மூவரில், யார் வெற்றியாளர் என்பதைப் பொதுமக்களின் வாக்களிப்புக்கு விடப்படும்.

பிற பிக் பிரதர் நிகழ்ச்சிகளைப் போலன்றி, இந்தியப் பதிப்பானது வீட்டில் தங்க, பிரபலங்களைப் பயன்படுத்துகிறது, பொது மக்களிலிருந்து யாரையும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதில்லை.

வீடு

இந்த வீடு அழகானதாக அமைக்கப்பட்டும், அனைத்து வகைகளிலும் நவீன வசதிகளைக் கொண்டதாகவும் உள்ளது, ஆனால் இரண்டு படுக்கையறைகள், நடுவீடு (வாழும் பகுதி), சமையலறை, சேமிப்பறை (ஸ்டோர் ரூம்), இரண்டு கழிப்பறை மற்றும் இரண்டு குளியல் அறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

வீடு அழகான அறைக்கலன்களைக் கொண்டும், வீட்டு வளாகத்தில் நீச்சல் குளம், ஒரு பூங்கா, உடற் பயிற்சி சாதனங்கள் போன்றவை உள்ளன. பிக் பாஸ் வீட்டு உறுப்பினர்களுடன் குரல் வழியில் பேச கம்யூன் அறை என்ற அறை உள்ளது, கம்யூன் அறைக்கு வீட்டில் இருப்பவர்களில் யாரை வேண்டுமானாலும் பிக்பாஸ் அழைத்து கலந்துரயாடுவார். வீட்டில் தொலைக்காட்சி, தொலைபேசி, இணைய இணைப்பு, பேனா, தாள், புத்தகம், செய்தித்தாள் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.

விதிகள்

அனைத்து விதிகளும் பார்வையாளர்களிடம் கூறப்படவில்லை என்றாலும், மிக முக்கியமான விதிகள் தெளிவாக உள்ளன. பங்கேற்பாளர்கள் தமிழைத் தவிர வேறு மொழியில் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அனுமதிக்கப்படும்போது தவிர எந்த நேரத்திலும் இவர்கள் வீட்டு வளாகத்தை விட்டு வெளியேற முடியாது. பிக்பாசுடன் பேசிய விசயங்களில் அவர் யாருடனும் கலந்துரையாடக்கூடாது என்று கூறிய விசயங்களை யாருடனும் கலந்துரையாடக் கூடாது. பகல் நேரத்தில் தூங்கக்கூடாது.

தங்களுக்கான உணவை தாங்களே சமைத்து உண்ணவேண்டும். வீட்டு சமையல், வீட்டை சுத்தப்படுத்துதல், கழிவறை, குளியலறை ஆகியவ வேலைகளை வீட்டிலிருப்பவர்கள் குழுவாக பிரிந்து செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு நுண்பேசி (மைக்ரோபோன்) வழங்கப்பட்டிருக்கும் அதை எப்பொதும் தங்கள் கழுத்தில் மாட்டி இருக்க வேண்டும்.
போட்டியின்போது போட்டியாளர்கள் ஒரே அறையில் போடப்பட்ட கட்டில்களிலில்தான் உறங்கவேண்டும். நீச்சல் குளத்தை ஒரு சமயத்தில் 5 பேர் மட்டுமே பயன்படுத்துவேண்டும். ஏதாவது தீவிரமான சிக்கல் இருந்தால், போட்டியாளர் நேரடியாக வெளியேற்றப்படலாம்.
இதன் இரண்டாவது பாகம் ஜூன் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்கப்பட்ட  நிலையில் அதற்கான டீசர் இன்று வெளியாகியுள்ளது. கமல்ஹாசனே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுருக்கிறார். இரண்டாவது பாகத்திற்கும் தொகுப்பாளர் கமல்ஹாசனே. இந்த நிலையில் போட்டியாளர்களும் தெரிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.