இலங்கை பிரதான செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்துக்களின் எண்ணிக்கை உயர்வு…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. 


அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெறும் விபத்துக்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஆகியனவற்றில் இன்றைய தினம் ஏழு விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களைச் செலுத்தும் போது மிகுந்த நிதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு சாரதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேகக்கட்டுப்பாடு குறித்தும் சாரதிகள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.