பிரதான செய்திகள் விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸில் நடால் – சிவிற்றோலினா சம்பியனானார்கள்


ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஸ்வேரேவ்வை வீழ்த்தி நடால் சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.  நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ; ஸ்பெயினின் ரபேல் நடால் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வேரேவை எதிர்த்து விளையாடி 6-1, 1-6, 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்ற ரபேல் நடால் சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.

அதேவேளை பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான உக்ரைனின் எலினா சிவிற்றோலினா (Elina Svitolina ) , சிமோனா ஹாலெப்பை 6-0, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers