இலங்கை பிரதான செய்திகள்

வட­மா­காண சபையை கலைக்க வேண்டும் – விக்கிகு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்…

புலி­களை நினை­வேந்­திய வட­மா­காண முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் சர்வதேசத்திற்கு முன்வைத்த கருத்­தினை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அனு­ம­திக்­கின்­ற­னரா? வடக்கில் புலி­களை நினைவு கூரும் செயற்­பா­டு­க­ளுக்கு அனு­மதி வழங்­கி­யமை, நினை­வுத்­தூபி அமைத்­தமை என்­பன அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்­புடன் இடம்பெறுகின்றனவா என்­பதை உட­ன­டி­யாக நாட்டு மக்­க­ளுக்கு கூற வேண்டும் என்று கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் கோரி­யுள்­ளனர்.

வடக்கின் நிலை­மை­களை எந்த வகை­யி­லேனும் கட்­டு­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். ஆகவே ஜனா­தி­பதி உட­ன­டி­யாக வட­மா­காண சபையை கலைத்து நாட்டின் அமைதியை சீரழிக்கும், பிரி­வி­னையை தூண்டும் விக்­கி­னேஸ்­வரன் மற்றும் ஏனைய உறுப்­பி­னர்­க­ளுக்கு எதிராக உட­ன­டி­யாக சட்ட நட­வ­டிக்­கைளை எடுக்க வேண்டும் எனவும் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் வலியுறுத்தி உள்ளனர்.

வடக்கில் கடந்த 18ஆம் திகதி இடம்­பெற்ற நினை­வேந்தல் நிழல்­வுகள் மற்றும் வட­மா­காண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முன்­வைத்த கருத்­துக்கள் குறித்து தமது நிலைப்­பாட்­டினை கூறும் போதே முன்னாள் அமைச்சர்களும், கூட்டு எதிர்கட்சியின் முக்கியஸ்த்தர்களுமான ஜி.எல் பீரிஸ், மற்றும் பந்துளகுணவர்த்தன ஆகியோர் இவ்வாறு  தெரி­வித்­துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers