ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போ காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயடைந்தநிலையில் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூத்துக்குடி மக்கள் இன்று 100வது நாள் போராட்டத்தை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியததையடுத்து அவர்கள் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் அங்கு வன்முறை வெடித்ததையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தநிலையில் தற்பொழுது 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் ஆபத்தானநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment