சினிமா

தமிழ் சினிமாவில் எதிர்காலத்தில் நகைச்சுவையும் நகைச்சுவை நடிகர்களும் இருப்பார்களா?


தமிழ் சினிமாவில் வாரம் ஒன்றில் 4 முதல் 5 படங்கள் வெளிவருகின்றன. இந்த நிலையில் நகைச்சுவை நடிகர்கள் பலரும் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் எதிர்காலத்தில் நகைச்சுவைகளும் நகைச்சுவை நடிகர்களும் இருப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவைப்ட பொறுத்தவரையில் ஆண்டு ஒன்றுக்கு 200 படங்களுக்கும் அதிகமாக வெளியாகின்றன. ஆனால் அவற்றில் நான்கில் ஒரு பங்கு படங்கள்கூட வெற்றி பெறுவதில்லை.இதற்கு குடும்ப ரசிகர்களை இழந்தததே காரணம் என்று கூறப்படுகிறது. குடும்ப ரசிகர்களுக்கு படங்களில் நகைச்சுவை எதிர்பார்த்து படம் பார்க்கின்றனர்.. மனம் விட்டு சிரித்து ரசித்து மகிழ அவர்கள் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

எனினும் தற்போது தமிழ் சினிமா படங்கள் நகைச்சுவை இல்லாத நிலையில் வருகின்றன. கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் அவர்களின் இடத்தை நிரப்பும் நட்சத்திரங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதற்கான காரணமாக நகைச்சுவை நடிகர்கள் படத்தின் நாயகர்களாக நடிக்க விரும்பிச் செல்வதே ஆகும்.. சந்தானமும் வடிவேலுவும் நாயகர்களாக நடிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த வரிசையில் எஞ்சியுள்ள நகைச்சுவை நடிகர்களும் நாயகர்களாக களம் இறங்கவுள்ளனர்.
நகைச்சுவை நடிகர் கருணாகரன் பொது நலன் கருதி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். நகைச்சுவை  நடிகராக சில படங்களில் நடித்த ஜெகன் ’இன்னும் கல்யாணம் ஆகல’ என்ற படத்தில் ஹீரோவாகி விட்டார். நயன் தாராவுடன் யோகி பாபு நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுவுக்கு நயனை காதலிக்கும் வேடம். இந்த திரைப்படத்தில் ஹீரோ இல்லை. இப்போது ஆர்ஜே பாலாஜியும் எல்கேஜி என்னும் படத்தில் ஹீரோவாகி விட்டார். அடுத்து சூரி, சதீஷும் ஹீரோவாக களம் இறங்குவது குறித்து பரிசீலித்து வருகின்றனராம்.இந்த நிலையில் எதிர்காலத்தில் நகைச்சுவைகளும் நகைச்சுவை நடிகர்களும் இருப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 14 other subscribers