இலங்கை பிரதான செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு- மேல் கொத்மலை நீர்தேகத்தின் வான்கதவு திறப்பு


நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 10 உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 14 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றத்தில் 18,542 குடும்பங்களைச் சேர்ந்த 84,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. நாடு பூராகவும் 7526 குடும்பங்களின் 27,621 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்கள் 194 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதேவேளை சில நீர் நிலைகளில் மழை நீர் நிரம்பி வருகின்றது எனவும் மேல் கொத்மலை, காசல்ரீ, மவுஸ்ஸாக்கலை, லக்ஸபான, கெனியன், விமலசுரேந்திர போன்ற நீர்தேக்கங்களின் நீரின் மட்டம் உயர்ந்துள்ளது.இதனையடுத்து மேல் கொத்மலை நீர்தேகத்தின் வான்கதவு ஒன்று இன்று காலை முதல் திறந்து விடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.