இந்தியா பிரதான செய்திகள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர் மீது இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழுவினர் மீது காவல்துறையினர் இன்று மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று மக்கள் திரண்டு கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தனர்.

துப்பாக்கி சூடு சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்ற அதேசமயம் தூத்துக்குடியிலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைக்க முற்பட்டநிலையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. காவல்துறை வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் இன்று போராட்டக்காரர்களுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்ட போது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதாகவும் காவல்துறையினர் தடியடி நடத்தினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அன்றும் அங்கு காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதன்போது 22 வயதான காளியப்பன் என்னும் இளைஞர் கொல்லப்பட்டுள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap