இலங்கை பிரதான செய்திகள்

மட்டக்களப்பு கித்துள் காட்டுக்குள் துப்பாக்கி வெடித்தத்தில் கருப்பையா ராமகிருஷ்ணன் பலி…


மட்டக்களப்பு கித்துள் காட்டுக்குள் மிருக வேட்டைக்குச் சென்றவரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.  நேற்றிரவு இடம் பெற்ற இந்த சம்பவத்தில் கரடியனாறு கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய கருப்பையா ராமகிருஷ்ணன் என்பவர் பலியானதாக கரடியனாறு காவற்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த நபர் துப்பாக்கியுடன் மிருக வேட்டைக்குச் சென்றபோது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தொடைப்பகுதியில் குண்டு பாய்ந்ததையடுத்து, அவரை உடனடியாக செங்கலடி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த காவற்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.