உலகம் பிரதான செய்திகள்

கனடாவின் ரொரண்டோவில் குண்டுவெடிப்பு – 15 பேர் காயம்

கனடாவின் ரொரண்டோ மாகாணத்தின் மிசிஸாயுகா பகுதியில் உள்ள இந்திய விடுதி; ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நேற்று இரவு த ஏற்பட்ட இந்தக் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேகத்துக்கிடமைன முறையில் இருவர் குறித்த விடுதியினுள் சென்றமை தெரிய வந்துள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணிகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.