எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ போட்டியிடுவதாக இருந்தால், தேர்தலுக்காக அவர் செலுத்த வேண்டிய கட்டுப்பணத்தை அவர் சார்பில் தான் செலுத்த தயார் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று (25) கம்பஹாவில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சரத் பொன்சேகா கோத்தாபய ராஜபக்ஷ நாட்டில் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது பலர் பயந்தார்கள். வெள்ளை வான் அனுப்பினார், கடத்தினார், குண்டர்களை அனுப்பி தாக்குதல் மேற்கொண்டார், சொத்துகளை கொள்ளையடித்தார், இதனால் மக்கள் அஞ்சினார்கள். ஆனால் தான் எப்போதும் ராஜபக்ஷ குடும்பத்தில் இருக்கும் யாருக்கும் பயந்தது இல்லை எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்
Spread the love
Add Comment