Home இலங்கை கங்குவேலி கிராமத்தில் முன்னாள் புலி உறுப்பினர் தற்கொலை…

கங்குவேலி கிராமத்தில் முன்னாள் புலி உறுப்பினர் தற்கொலை…

by admin

திருகோணமலை மூதூர் காவற்துறைப்பிரிவிற்கு உட்பட்ட தெகிவத்த பிரதேசம் கங்குவேலி கிராமத்தில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளதாக மூதூர் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் அவர் இவ்வாறு தற்கொலை செய்திருப்பதாக காவற்துறையின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்ததுள்ளது.

உயிரிழந்தவர் புலிகள் இயக்கத்தில் இருந்து 2004ம் ஆண்டில் விலகி, திருமணம் முடித்தவர் என்றும் மூதூர் இரால் குழியை பிறப்பிடமாக கொண்டவர் எனவும்,  திருமணம் முடித்த பின்னர் தெகிவத்த பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More