இலங்கை பிரதான செய்திகள்

இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் சொந்தமான  பூமி இது- மரபுகளை மதிக்காவிடின் நாட்டிலிருந்து வெளியேறுங்கள்…

 திருவாய் மலர்தருளினார் மறவன்புலவு சச்சிதானந்தம் – குளோபல் தமிழ்ச் செய்தியார்…

இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான இந்த பூமியின் மரபுகளை மதிக்க தெரியாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள். என தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

பசுவதைக்கு எதிராகவும் சாவகச்சேரி கொல்களத்தினை மூடுமாறு கோரி சாவகச்சேரியில் இன்றைய தினம் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

ஐயாயிரம் , ஆறாயிரம் ஆண்டுகளாக நாம் காத்து வரும் மரபு எருதாக இருந்தாலும் சரி , பசுக்களாக இருந்தாலும் சரி அவற்றை நாம் பேணுவதும் பாதுகாப்பதும் எம் முன்னோர்கள் செய்து வருகின்றார்கள்

தற்போது ஏன் மாட்டு இறைச்சி கடை கொல்கலன்கள் இங்கு வந்துள்ளது. 1990ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கால பகுதியில் அவைகள் இங்கு இருக்கவில்லை. 2007ஆம் ஆண்டுகளின் பின்னரே அவை இங்கே வந்தன.

இதை யார் கொண்டு வந்தார்கள் ? இங்கு முன்னோர்கள் இருந்தவர்களா ? இல்லை நேற்று இங்கு வந்தவர்கள். அவர்கள் தாம் இங்கு வர முதல் எங்கு இருந்தார்களோ அங்கு எந்த மிருகத்தை மதிக்கின்றார்களோ அந்த மிருகங்களை அவர்கள் ஒரு போதும் கொல்ல மாட்டார்கள். சவூதியில் இந்துக்கள் வாழுகின்றார்கள். அவர்கள் அங்கே பன்றி இறைச்சி சாப்பிட முடியுமா ?

ஒல்லாந்தர்கள் மாட்டிறைச்சி கேட்ட போது கொடுக்க மாட்டேன் என ஞானப்பிரகாசர் இங்கிருந்து சிதம்பரத்திற்கு போனவர். ஆறுமுக நாவலர் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டாம் என வலியுறுத்தியவர்.

இது இந்து பூமி அல்லது பௌத்த பூமி வேறு எவருக்கும் இந்த பூமி சொந்தமானது அல்ல இதை நாங்கள் தெளிவாக சொல்கின்றோம். இங்கே வந்தால் எங்கள் பூமியின் மரபுகளை பேணி நடவுங்கள். இல்லையெனில் நீங்கள் உங்கள் நாடுகளுக்கே திரும்பி விடுங்கள்.

எங்கள் மரபுகளை மதிக்க முடியவில்லை எனில் உங்கள் நாடுகளுக்கு சென்று விடுங்கள். இந்த மண் பசுக்களை பாதுகாத்த பெருமை மிக்க மண். இந்த மண்ணிலே பசுக்களின் இரத்தத்தை சிந்த விட முடியாது.

எத்தனை பசுக்களை , நாம்பன் மாடுகளை கொன்று குவித்துள்ளீர்கள். கடந்த வாரம் 300 மாடுகள் வெட்டப்பட்டன. சாவகச்சேரியில் யார் மாடு சாப்பிடுகின்றார்கள். 12 இஸ்லாமிய குடும்பங்கள் 100க்கு சற்று அதிகமான கிறிஸ்தவ குடும்பங்கள் 70 ஆயிரம் மக்கள் சைவ மக்கள் அவர்களில் எத்தனை பேர் மாடு சாப்பிடுகின்றார்கள்.

எனவே எங்கள் நாட்டில் மாடுகளை வெட்டுவதனை அனுமதிக்க முடியாது. விரும்பின் உங்கள் நாடுகளுக்கு சென்று அங்கே மாடுகளை வெட்டுங்கள். என தெரிவி

Spread the love
 •   
 •   
 •   
 •   
 •  
 •  
 •  
 •  

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

 • உசாரு, உசாரு… ஊரையடிச்சு உலையில போடுற கும்பலொன்னு காவிவேசம் போட்டு ஊருக்குள்ள பூந்திருக்கு……..
  வட இந்தியருக்கு சொந்தமான எந்த சிவசேனயை இப்போது நமக்குள் திணிக்க என்ன அவசியம். இந்தப் பாதகர் கூட்டம் உள்ளே நுழைந்தால் எம் பாரம்பரியம் அழிந்து போகும்.
  இந்து என்பது ஒரு சமய நெறி முறையே அல்ல., ஒரு ஆதிக்க கூட்டம் பாமரர்களை ஏமாற்ற செய்து வைத்திருக்கும் ஒரு பொறி முறை. இது என்றும் எங்களுக்குத் தேவையே இல்லை. ஏன் எனில் அன்றே ஆறுமுகநாவலர் பெருமான், சைவ போதினி, சைவ சித்தாந்த விளக்கம் என்பன மூலம் ஆலயக் கட்டுமானம், பூசைகள் மற்றும் வழிபாட்டு முறை அனைத்தையும் வடிவமைத்து தந்துள்ளார். இந்த கும்பலை உள்ளே விட்டால் எமது பாரம்பரியத்தை தலை கீழாகவே மாற்றி சாதிப் பாகுபாடு, மதப் பிரிவினை என்பவற்றை உருவாக்கி விடக்கூடிய பயங்கரமானவர்கள்.
  சிவனே! எங்களுக்கு முழு முதல் கடவுள் என்ற நம்பிக்கையிலும் தீ வைத்து விடக் கூடியவர்கள்,
  உங்களையும் மண்ணில் ஒரு பிள்ளையாரை செய்ய வைச்சு வினாயகர் சதுர்திக்கு கடல்லையும் கரைக்க விடுவாங்க
  சிவன், அம்மன்(சக்தி) என்று இருக்கும் சிவ ஆலயங்கள்., சிவாவிஷ்னு ஆலயங்களாக மாறும்.
  “சிவன் நாமம்”, விபூதி காணாமல் போய்.,” நாமக்குறியே” அடையாளம் ஆகும்
  பன்னிரு திருமுறைகளும் மறைந்து போய் முழுவதும்
  ” சமஸ் கிருதம்” மே என்று ஆகிவிடும்.
  :

  எனக்கு இப்போது தோன்றுவது இவர்களை வெல்ல, தோழர். டக்கிளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த போது அறிமுகம் செய்த அனைத்து சாதியினரும் அர்சகர் ஆகும் திட்டமும்., தமிழில் பூசைசெய்யும் திட்டமும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்துவது.

  ஏதோ செலல்லுறதை சொல்லிபுப்டன், அப்புறம் வந்து குத்துது, குடையுதுன்னு வந்து இங்கினை மூக்கு சிந்தினா. மூக்கு மேலயே குத்துவன்.