குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கண்டி நிர்வாக மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, மகாசோன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க மீது, அனுராதபுரம் சிறைச்சாலையில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த அமித் காவற்துறை மற்றும் சிறைச்சாலைகள் அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேவேளை அனுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவரே அமித் வீரசிங்க மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love
Add Comment