இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

புலிகளை அடக்க பிரித்தானியா வழங்கிய உதவிகள் – இலங்கை இந்திய உறவுகள் குறித்த ஆவணங்கள் அழிப்பு…

2ஆம் இணைப்பு தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…

“இலங்கை/இந்திய உறவுகள் 1979 – 1980” – MI 5 – S.A.S உடனான செயற்பாடுகள் குறித்த கோப்புக்கள் அழிப்பு….

பிரித்தானிய அரசாங்கம், இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய உதவிகள் குறித்த விவரங்கள் அடங்கிய சுமார் 200 ஆவணங்களை (கோப்புகள்) பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய செயலகம் அழித்துள்ளதாக, தி கார்டியன் ஊடகம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்ட காலப்பகுதியில், அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு, பிரித்தானியாவின் எம்.ஐ 5 (இராணுவ புலனாய்வு பிரிவு – 5) மற்றும் எஸ்.ஏ.எஸ் (விசேட வான் சேவை) ஆகிய அமைப்புகள், நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டமை உள்ளிட்ட தகவல்கள் இந்தக் கோப்புகளில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அழிக்கப்பட்ட அந்தக் கோப்புகளில் இலங்கையில் புலிகள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்ட காலப்பகுதியில், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் காணப்படட உறவுகள் குறித்த கோப்புகளும் உள்ளடங்குவதாக பிரிஐ (PTI) செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவின் 1958ஆம் ஆண்டின் பொது ஆவணங்கள் சட்டத்தின்படி, அரச திணைக்களங்கள், வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ள போதிலும், இந்த ஆவணங்கள் பாதுகாக்கத் தேவையற்றவை என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது, ஏற்கனவே கென்யாவில் பிரித்தானிய நடத்திய தாக்குதல் தொடர்பான ஆவணங்களையும் அந்த நாட்டு அரசாங்கம் அழித்தமையை த கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் குறித்த வரலாற்று ஆவணங்கள் அழிக்கப்பட்டமையை ஆட்சேபித்து இலங்கை தொடர்பான நிபுணரும் குற்றவியல்துறை நிபுணருமான மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தின் ரிச்சல் சொய்கி என்பவர், ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ அமைப்பிடம் முறையிட்டுள்ளார். இந்த ஆவணங்களை அழிக்கப்பட்டமையை அடுத்து இலங்கையின் போரின்போது காணாமல் போதல் மற்றும் சித்திரவதைகளுக்கு பிரித்தானியா உதவியதா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கருத்துரைத்துள்ள தமிழ் தகவல் மையத்தின் செயலாளர் வைரமுத்து வரதகுமார், பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த செயல் வருத்தமளிப்பதாகக் கூறினார்.

போரின் போது தமிழர்களுக்கு எதிரான செயல்களுக்கு பிரித்தானியா உதவியதா என்ற விடயம் அதிருப்தியை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.1978 ஆம் ஆண்டு போர் ஆரம்பித்தபோது பிரித்தானிய நிபுணர்களை இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தன அழைத்திருந்தார். அதன்படி, மார்கிரட் தட்சரின் அரசாங்கத்தின் கீழ் பணியாற்றிய பாதுகாப்பு நிலையமான எம்ஐ 5ன் பணிப்பாளர் ஜிம் கலாகென் இலங்கைக்கு 1979ஆம் ஆண்டு விஜயம் செய்தார். இந்தநிலையில் பிரித்தானியாவினால் இந்த இரண்டு ஆவணங்களும் தற்போது அழிக்கப்பட்டுள்ளதாக கார்டியன் குறிப்பிட்டுள்ளது.

இதனைதவிர 1980ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் எஸ்ஏஎஸ் படையினர் இலங்கை படையினருக்கு பயிற்சி அளிப்பதற்காக இலங்கைக்கு வந்தனர் என்ற ஆவணமும் பிரித்தானிய அரசாங்கத்தினால் அழிக்கப்பட்டுள்ளதாக கார்டியன் தெரிவித்துள்ளது. இந்த வகையில் இலங்கை தொடர்பிலான 195 கோப்புகள் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள அந்தச் செயலகம், குறித்த கோப்புகள் 1978க்கும் 1980க்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளது. எனினும் அந்த கோப்புகள் எங்கு? யாரால்? எப்படி அழிக்கப்பட்டன என்பது தொடர்பிலான தகவல்களை வெளியிடப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில், “இலங்கை/இந்திய உறவுகள் 1979 மற்றும் 1980” என தலைப்பிடப்பட்ட இரண்டு கோப்புகளும் அழிக்கப்பட்ட கோப்புகளில் உள்ளடங்குமென பிரிஐ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் நிலைகொண்டிருந்த, இந்திய அமைதிகாக்கும் படைகளின் செயற்பாடுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர (அந்த சந்தர்ப்பத்தில்) தொடர்பிலான தகவல்களை அறிந்துகொள்வதற்கும், குறித்த கோப்புகள் ஆதாரமாக காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“இலங்கை/இந்திய உறவுகள் 1979 – 1980” – MI 5 – S.A.S உடனான செயற்பாடுகள் குறித்த கோப்புக்கள் அழிப்பு….

May 27, 2018 @ 19:05

விடுதலைப் புலிகளை கட்டப்படுத்த பிரித்தானியா இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய உதவிகள் குறித்த விவரங்கள் அடங்கிய சுமார் 200 ஆவணங்கள் அழிக்கப்பட்டன…

பிரித்தானிய அரசாங்கம், இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கிய உதவிகள் குறித்த விவரங்கள் அடங்கிய சுமார் 200 ஆவணங்களை (கோப்புகள்) பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய செயலகம் அழித்துள்ளதாக, தி கார்டியன் ஊடகம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது.

விடுதலைப் புலிகள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்ட காலப்பகுதியில், அவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு, பிரித்தானியாவின் எம்.ஐ 5 (இராணுவ புலனாய்வு பிரிவு – 5) மற்றும் எஸ்.ஏ.எஸ் (விசேட வான் சேவை) ஆகிய அமைப்புகள், நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவற்காக இலங்கைக்கு அனுப்பப்பட்டமை உள்ளிட்ட தகவல்கள் இந்தக் கோப்புகளில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அழிக்கப்பட்ட அந்தக் கோப்புகளில் இலங்கையில் புலிகள் அமைப்பு கட்டியெழுப்பப்பட்ட காலப்பகுதயில், இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் காணப்படட உறவுகள் குறித்த கோப்புகளும் உள்ளடங்குவதாக பிரிஐ (PTI) செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய பொது ஆவணங்கள் சட்டத்தின்படி, அரச திணைக்களங்கள், வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ள போதிலும், இந்த ஆவணங்கள் பாதுகாக்கத் தேவையற்றவை என பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது

இந்த வகையில் இலங்கைத் தொடர்பிலான 195 கோப்புகள் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள அந்தச் செயலகம், குறித்த கோப்புகள் 1978க்கும் 1980க்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளது. எனினும் அந்த கோப்புகள் எங்கு? யாரால்? எப்படி அழிக்கப்பட்டன என்பது தொடர்பிலான தகவல்களை வெளியிடப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில், “இலங்கை/இந்திய உறவுகள் 1979 மற்றும் 1980” என தலைப்பிடப்பட்ட இரண்டு கோப்புகளும் அழிக்கப்பட்ட கோப்புகளில் உள்ளடங்குமென பிரிஐ செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் நிலைகொண்டிருந்த, இந்திய அமைதிகாக்கும் படைகளின் செயற்பாடுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர (அந்த சந்தர்ப்பத்தில்) தொடர்பிலான தகவல்களை அறிந்துகொள்வதற்கும், குறித்த கோப்புகள் ஆதாரமாக காணப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புலிகள் தொடர்பான ஆவணங்களை அழித்தமையின் ஊடாக பிரித்தானியா எதனையும் மறைக்கின்றதா?

விடுதலைப் புலிகள் குறித்த கோவைகளை பிரித்தானியா அழித்துள்ளது..

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers