இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர் கம்பஹாவைச் சேர்ந்த 24 வயதான சிந்தன தனஞ்சய என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை முடிந்து திரும்பிக்கொண்டிருந்த வேளையில் அவர் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் பாரவூர்தி ஒன்றுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment