குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரின் கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரான இவரது குடும்ப உறுப்பினர்கள் நெருங்கிய உறவினர்கள் ஆகியோரின் வங்கிக் கணக்கு விபரங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
வங்கி வைப்புப் பெட்டகங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அண்மைக் காலங்களில் பாராளுமன்றிற்கு உள்ளேயும் வெளியேயும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இந்த அமைச்சர், கட்சியின் சார்பில் முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த அமைச்சரின் ஒரு வாரிசு அரசாங்க நிறுவனமொன்றில் இணைந்து செயற்பட்டதாகவும் இதன் போது இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பிலேயே விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment