பிரதான செய்திகள் விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் மூன்றாம் சுற்றுக்குத் தகுதி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


பாரீஸ் நகரில் நடைபெற்று வருகின்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (Novak Djokovic )  3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் நோவக் ஜோகோவிச் 7-6 (7-1), 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஸ்பெயின் வீரர் ஜோர்மி முனார் (Jaume Munar    ) ஐ வீழ்த்தி மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் ஜோகோவிச் முழங் கையில் சத்திரசிகிச்சை செய்து கொண்டிருந்தார். சத்திரசிகிச்சையின் பின்னர் அவர் பழைய திறமைகளை வெளிப்படுத்துவதில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது இதேவேளை, பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மற்றுமொரு போட்டியில் சிமோனா ஹாலெப் வெற்றியீட்டி இரண்டாம் சுற்றுக்கு முன்றே;றமடைந்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் போட்டித் தொடரில் சிமோனா இரண்டாம் இடத்தைப் பெற்;றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வீராங்கனை அலிசன் ரிஸ்கி ( Alison Riske ) ஐ 2-6 6-1 6-1 என்ற செற் கணக்கில் வீழ்த்தியே சிமோனா வெற்றியிட்டியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.