இலங்கை பிரதான செய்திகள்

பயங்­க­ர­வாத தடைச்­சட்டத்தின், உச்­ச­  காலங்களில்   பாரிய அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன….

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் – தீபிகா உடுகம

தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலுமின்றி, மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதை தடுக்கும் வகையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

கடந்த தசாப்த காலங்களில் இச்சட்டத்தினூடாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட அவர், “நாம் தேசிய ரீதியில் சில நட­வ­டிக்­கை­களை முன்னெடுக்க  வேண்­டி­யுள்­ளது. குறிப்­பாக பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நீக்­கப்­படல் அவ­சி­ய­மாகும்.

மனித உரி­மைகள் ஆணைக்­குழு முன்­வைத்­துள்ள பிர­தான கோரிக்­கை­களில் இதுவும் ஒன்­றாகும். பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நில­விய உச்­ச­கட்ட  காலங்களில் நாட்டில் பாரிய அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன தேசிய பாது­காப்பு விட­யத்தில் அக்­கறை இருக்க வேண்டும். அதற்­கான  சட்­டங்கள் இருக்க வேண்டும். ஆனால் பயங்­க­ர­வாத தடைச்சட்டத்தின்  இறுக்­க­மான தன்­மைகள் தடுக்­கப்­பட வேண்டும். ஆகவே தான் மாற்று  சட்டம் ஒன்­றினை முன்­னெ­டுக்க வேண்டியுள்ளது.  பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­கி­விட்டு அதில் வெற்­றி­டத்தை ஏற்­ப­டுத்த வேண்டும் என நாம்

கூற­வில்லை.  நீக்­கப்­படும் சட்­டத்­திற்கு பதி­லாக தேசிய பாது­காப்பை பலப்படுத்தும் மாற்று சட்டம் ஒன்­றினை கொண்­டு­வர வேண்டும். ஆனால் கடுமையான தன்மைகளை  நீக்க வேண்டும். உதா­ர­ண­மாக பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் ஒரு­வரை 18 மாதங்கள் நீதி­மன்ற அனு­மதி இல்­லாது தடுத்து வைக்க முடியும். அதேபோல் கைது­செய்­யப்­பட்ட நபர் எந்த முறையிலும் மனித உரிமை மீற­லுக்கு உள்­ளாக்­கப்­பட கூடாது. அவர் பயங்கரவாத சந்தேக நப­ரா­கவோ  அல்­லது மரண தண்­டனை கைதி­யா­கவோ இருக்­கலாம்.   அது  முக்­கியம் இல்லை. மனித உரி­மைகள் என்­பது அனைவருக்கும்  சம­மா­னது.

உரிய விசா­ர­ணை­களும் இடம்­பெற வேண்டும். அதற்கு மாற்று  நடவடிக்கைகளை கையாள வேண்டும். கடந்த யுத்த கால சூழலில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட பலர் மீது கடு­மை­யான சித்­தி­ர­வ­தைகள்   இடம்­பெற்­றன என்­பதை மறுக்க முடி­யாது. எனினும் இவற்றை தடுக்க வேண்டும்.  சித்­தி­ர­வ­தைகள் என்பதை தவிர்த்து புல­னாய்வு மூல­மா­கவும் மன­நிலை சார் மருத்­துவ மற்றும் தொழி­நுட்ப முறை­க­ளிலும் உண்­மை­களை கண்­ட­றிய முடியும். இதில் புல­னாய்வு துறை­யி­ன­ரது பங்­க­ளிப்பு அதி­க­மாக இருக்க வேண்டும்.

உலக நாடு­களில் இவற்றை கையாண்டு வரு­கின்­றனர். எமது நாட்­டிலும் அதனை கையாள வேண்டும். சில நாடு­களில் மனித உரி­மைகள் மீறப்­ப­டு­கின்­றன அவர்கள் ஆதிக்­கத்தை தக்க வைக்க சித்­தி­ர­வ­தை­களை கையாண்டு வரு­கின்­றனர் என்ற கார­ணத்­தினால் நாமும் மனித உரி­மை­களை மீற­வேண்டும் என்ற கருத்தை ஒருபோதும்  ஏற்­று­கொள்ள முடி­யாது. கடந்த காலங்­களில் பயங்­க­ர­வா­தத்தை முறி­ய­டிப்­பது என்ற பெயரில் பாரிய அளவில் மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றன. சித்­தி­ர­வ­தைகள் இடம்பெற்றன. அதனை மூடி  மறைக்க ஏனையோர் செய்கின்றனர் நாம் செய்தால் என்ன என்ற காரணியை கூறுவதை ஏற்றுகொள்ள முடியாது.

இதில் காலாவதியான சட்ட முறைமைகளை  வைத்துக்கொண்டு இயங்க முடியாது. புதிய சட்டங்களை உருவாக்கி நடவடிக்கைகளை கையாள வேண்டும். புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம் என்பதை அரசாங்கத்திற்கும் தெரிவித்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.