நிக்கரகுவாவில் ஜனாதிபதி டானியல் அர்டெகோவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2007-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகின்ற டானியல் அர்டெகோவின் ஆட்சிக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் இந்த துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Add Comment