இலங்கை பிரதான செய்திகள்

பசில் ராஜபக்ஸ உள்ளிட்டோருக்கெதிரான வழக்கு ஒத்திவைப்பு

தேர்தல் காலத்தில் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 4ம் திகதி வரை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும திணைக்களத்திற்குச் சொந்தமான, நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் , முன்னாள் அமைச்சர்  பசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சாட்சியாளர்கள் முன்னிலையாகியிருந்த நிலையில் வழக்கினை எதிர்வரும் 06ம் திகதிக்கு ஒத்திவைப்பதாகவும் சாட்சியாளர்களை அன்றைய தினம் மன்றில் முன்னிலையாகுமாறும நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.