பிரதான செய்திகள் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச்- அலெச்சாண்டர் ஜிவெரேவ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்


பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 3-வது சுற்றில் ஸ்பெயினின் பவுதிஸ்டாவினை எதிர்த்து போட்டியிட்ட ஜோகோவிச் 6-4, 6-7 (6-8), 7-6 (7-4), 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மேலும் ஜெர்மனியின் அலெச்சாண்டர் ஜிவெரேவ் 6-3, 3-6, 4-6, 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்கில் பொஸ்னியாவின் தமீர் ஸும்கூரை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

அதேவேளை மகளிர் ஒற்றையர் பிரிவில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-0, 6-3 என்ற நேர் செட்டில் பிரான்சின் பவுலின் பர்மெண்டியரை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ருமேனியாவின் மைஹேலா புஸர்நெஸ்கு உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 3-6, 5-7 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap