பிரதான செய்திகள் விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் 4 புதிய அணிகள்


சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் கிரிக்கெட் தர வரிசைப்பட்டியலில் ஏற்கனவே 12 அணிகள் உள்ள நிலையில் தற்போது மேலும் 4 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகளே இவ்வாறு புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.தரவரிசைப்பட்டியலில் இணைய குறைந்தபட்சம் 4 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம்ஆகிய அணிகள் 13-வது மற்றும் 14-வது அணிகளாக இணைக்கப்பட்டுள்ள அதேவேளை நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகள் 4 போட்டிகளில் விளையாடிய பின்னர் தரவரிசையில் சேர்க்கப்படும். கடந்த வருடம் நடைபெற்ற ஐ.சி.சி. உலக லீக் போட்டியில் வென்றதன் மூலம் நெதர்லாந்து அணி ஒருநாள் போட்டிக்கான அந்தஸ்தினைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

ஐ.சி.சி. ஒருநாள் போட்டி தரவரிசை விவரம்:-

1. இங்கிலாந்து (125 புள்ளிகள்), 2. இந்தியா (122), 3.தென்ஆப்பிரிக்கா (113), 4. நியூசிலாந்து (112), 5. அவுஸ்திரேலியா (104), 6.பாகிஸ்தான் (102), 7. பங்களாதேஸ் (93), 8.இலங்கை (77), 9.மேற்கிந்திய தீவுகள் (69), 10. ஆப்கானிஸ்தான் (63), 11.சிம்பாப்வே (55), 12.அயர்லாந்து (38), 13.ஸ்கொட்லாந்து (28), 14.ஐக்கிய அரபு அமீரகம் .

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.