பிரதான செய்திகள் விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – ஜோகோவிச் – தெய்ம்- ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

NovakDjokovic

பாரிஸ் நகரில் நடைபெற்றுவரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் நோவாக் ஜொகோவிச், டோமினிக் தெய்ம், அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.  நேற்றையதினம் நடைபெற்ற ஒரு போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் பெர்னாண்டஸ் வெர்டஸ்கோ ஆகியோர் போட்டியிட்ட நிலையில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் ஒஸ்ரிய வீரர் டோமினிக் தெய்ம், ஜப்பானின் கெய் நிஷிகோரியை எதிர்கொண்டு 6-2, 6-0, 5-7, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்றார். அதேபோன்று மற்றொரு போட்டியில், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் ரஸ்யாவின் கரன் கச்சனோவை 4-6, 7-6, 2-6, 6-3, 6-3 என்ற செட்கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இதன்மூலம் நோவாக் ஜொகோவிச், டோமினிக் தெய்ம், அலெக்சாண்டர் ஸ்வரேவ் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

AlexanderZverev

AlexanderZverev & DominicThiem

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.