குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பணம் பெற்றுக் கொண்டவர்களை அம்பலப்படுத்துமாறு அலோசியஸிடம் கபே கோரிக்கை விடுத்துள்ளது. பணம் பெற்றுக்கொண்டவர்கள் பற்றிய விபரங்களை அம்பலப்படுத்துமாறு பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரிடம் கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோனினால் எழுத்து மூலம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரிடமும், தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் வேறும் தேவைகளுக்காகவும் பணம் பெற்றுக் கொண்ட நபர்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்துமாறே இவ்வாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
Spread the love
Add Comment