உலகம் பிரதான செய்திகள்

பெண் ஒருவரை முத்தமிட்டமை தொடர்பில் பிலிப்பைன்ஸ் அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டு


பெண் ஒருவரை முத்தமிட்டமை தொடர்பில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டூர்ட்டே ( Rodrigo Duterte    ) விற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.  ஜனாதிபதி ரொட்ரிகோ டூர்ட்டே தென்கொரியாவிற்கான பயணத்தினை மேற்கொண்ட போது ;கொரிய வாழ் பிலிப்பைன்ஸ் மக்களுடன் சந்திப்பு நடத்தியிருந்தார்.

இதன்போது அவர் பிலிப்பைன்ஸின் பெண் பணியாளர் ஒருவரை உதட்டில் முத்தமிட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஒர் ஜனாதிபதி என்ற வகையில் ரோட்ரிகோ டூர்ட்டேயின் செயல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரோட்ரிகோ டூர்ட்டேபெண்கள் தொடர்பில் தவறாக நடந்து கொண்ட முதல் சந்தர்ப்பம் இது மட்டுமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.