பிரதான செய்திகள் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – டொமினிக் – மடிசன் கீஸ் – ஸ்லோனே அரையிறுதிக்கு முன்னேற்றம்

 

Dominic Thiem

பாரீஸ் நகரில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் ஒஸ்ரியாவின் டொமினிக் திம்மும் போட்டியிட்ட நிலையில் டொமினிக் திம் 6-4, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்குள் முன்னேறியுள்ளார்.

அதேவேளை பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மடிசன் கீஸ் , கஜகஸ்தானின் யுலியா புதின்ட்செவாவை 7-6 (7-5), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்த அரையிறுதிக்குள் நுழைந்துள்ளார்.

மற்றொரு போட்டியில் அமரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் ரஸ்யாவின் கசட்கினாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.

 Madison Keys

Sloane Stephens

 

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap