பிரதான செய்திகள் விளையாட்டு

பங்களாதேசுடன் இரண்டாவது 20 க்கு இருபதிலும் வென்று ஆப்கானிஸ்தான் தொடரை கைப்பற்றியுள்ளது

பங்களாதேஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்றையதினம் டேராடூனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஸ்; அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தநிலையில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதையடுத்து, 135 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது.  3 போட்டிகளைக் கொண்ட தொடரில் முதலாவது போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றியீட்டியிருந்த நிலையில் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி, முன்னிலை வகிக்கிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.