மத்திய லண்டனில் உள்ள மண்டேரியன் விடுதி (mandarin hotel ) யின் மேற்கூரையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீயை அணைக்க 100க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட புகையால் அந்த பகுதி கருமையாக காட்சியளிதததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீ விபத்தில் சேத விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
Add Comment