Simona Halep
பாரிசில் நடைபெற்றுவரும் கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் முகுருசா, சிமோனா ஹாலெப் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேற்றியுள்ளனர். இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றுப் போட்டி ஒன்றில் சிமோனா ஹாலெப், ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டு 6-7 (7-2), 6-3, 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு காலிறுதி சுற்றுப் போட்டியில் கப்ரின் முகுருசா, மரியா ஷரபோவாவை எதிர்கொண்டு 6-2, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் .இந்தநிலையில் நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில், ஹாலெப் – முகுருசா ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
Garbine Muguruza
Spread the love
Add Comment