இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், இலங்கைக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். உலகின் தலைசிறந்த துடுப்பாட்டக்காரர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ள சச்சின் டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மேலும் சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் சச்சின் 100 சதங்களுடன் முதலித்தில் உள்ளார்.
இந்தநிலையில் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கரும் இந்திய அணியில் இடம்பிடிக்க போராடி வந்தநிலையில், அவர் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார்.
உள்ளூர் கிரிக்கெட்டில் சகலதுறை ஆட்டக்காரராக திகழும் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Add Comment