Home இந்தியா எப்போதெல்லாம் பிரதமர் மோடியின் புகழ் சரிகிறதோ அப்போது கொலைச்சதி செய்திகள் எழுகின்றன – காங்கிரஸ்

எப்போதெல்லாம் பிரதமர் மோடியின் புகழ் சரிகிறதோ அப்போது கொலைச்சதி செய்திகள் எழுகின்றன – காங்கிரஸ்

by admin

.
ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது போல் பிரதமர் மோடியையும் கொலை செய்ய சதி நடப்பதாக புனே காவற்துறை தெரிவித்துள்ளமை தொடர்பில் ஐயம் எழுவதாக காங்கிரஸ் கட்சி தன் கருத்தினை பதிவு செய்துள்ளது. இத்தகைய செய்திகள் மோடி பயன்படுத்தும் மிகவும் பழைய உத்திகளாகும் என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இந்தச் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை எனக் கூறவில்லை என்ற போதிலும் அவர் முதல்வராக இருக்கும் காலந்தொட்டே இத்தகைய செய்திகள் பரப்பப்பட்டு வந்துள்ளன என அக்கட்சியின் முக்கியஸ்தர் சஞ்சய் நிருபம் தெரிவித்துள்ளார்.

எப்போதெல்லாம் மோடியின் புகழ் சரிவடைகிறதோ உடனடியாக அவரைக் கொலை செய்ய சதி நடப்பதாக செய்திகள் வெளியிடப்படும். எனவே இதில் எவ்வளவு உண்மை என்பதை விசாரணை செய்ய வேண்டும் எனவும் சஞ்சய் நிருபம் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியை பொது நிகழ்ச்சி அல்லது பிரச்சாரக் கூட்டத்தில் வைத்த கொலை செய்ய மாவோயிஸ்ட்டுகள் திட்டம் தீட்டியுள்ளதாக, மும்பை, நாக்பூர், டெல்லியில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் இருந்து மீட்கப்பட்ட கடிதத்தில் தெரிய வந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More