இந்தியா பிரதான செய்திகள்

கான்பூர் மருத்துவமனையில் ஏ.சி. இயந்திரம் வேலை செய்யாமையினால் 2 நாட்களில் 5 பேர் பலி


உத்தரபிரதேசம் மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏ.சி. இயந்திரம் பழுதடைந்தமையினால் 2 நாட்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மருத்துவமனையில், அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 முதியவர்கள் 5 பேர் அடுத்தடுத்து உயிர் இழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஏ.சி. இயந்திரம் கடந்த சில தினங்களாக வேலை செய்யாமையினால் வெயிலின் தாக்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் குறித்த முதியவர்கள் உயிர் இழந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் மருத்துவமனை நிர்வாகம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 8 other subscribers