Home இலங்கை இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 226 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 226 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி

by admin

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 226 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.  மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்ற நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டி அண்மையில் தொடங்கியிருந்தது. முதலில் நாணயச்சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தி நிலையில் தனது முதல் இன்னிங்சில் 154 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 414 ஓட்டங்களைப் பெற்று எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தது.

இதையடுத்து விளையாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 55.4 ஓவரில் 185 ஓட்டங்களைப் பெற்றநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சை விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 72 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

இந்தநிலையில் இலங்கை அணிக்கு வெற்றி பெற 453 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்;டதனைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி ஐந்தாம் நாள் ஆட்டத்தின் இலங்கை அணி 83.2 ஓவரில் 226 ஓட்டங்கள் பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.இதையடுத்து, 226 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனான ஷேன் டாவ்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More